ஒரு நாளைக்கு இத்தனை லட்சம்… அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து ப்ளீச்!

ஒரு நாளைக்கு இத்தனை லட்சம்… அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து ப்ளீச்!

மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு தனது அப்பா மிகப்பெரிய தயாரிப்பாளர் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் ரேஷ்மா பசுபலேடி இவர் முதன் முதலில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இந்த காமெடி காட்சி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. குறிப்பாக அந்த காமெடியில் சூரிக்கு ஜோடியாக இவர் நடித்து பிரபலம் ஆனார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டே பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் தனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

தொடர்ந்து திரைப்படம் சீரியல்களின் பிஸியாக நடித்த வரும் ரேஷ்மா அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் வாடிக்கையாக வைத்திருக்கிறார் இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஒரு நாள் சம்பளம் மட்டும் ரூ. 1 லட்சம் வாங்குகிறேன்.

என்னோட உதவியாளர் மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறார் என வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். மேலும் நீங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்திருக்கிறீர்களா என கேட்டதற்கு, ரேஷ்மா இல்லவே இல்லை அப்படி மட்டும் செய்திருந்தால் இந்நேரம் நான் எங்கேயோ போயிருப்பேன் என பளீச்னு கூறிவிட்டார்