தமிழ் நாடு அரசியலை புரட்டிப் போட விஜய்க்கு நல்ல வாய்ப்பு ஆனால் விஜய் அதனைச் செய்வாரா

தமிழ் நாடு அரசியலை புரட்டிப் போட விஜய்க்கு நல்ல வாய்ப்பு ஆனால் விஜய் அதனைச் செய்வாரா

அரசியல் ரீதியாக விஜய்க்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் விஜய் அதனைச் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை விஜய் செய்தால் அரசியலை புரட்டிப் போடும் அளவு பெரிய பூகம்பம் ஒன்று வெடிக்கலாம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான், சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார். இது ஒரு படுகொலை என்று பொலிசார் அறிவித்துள்ளார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய, தொண்டர்கள் சென்னையில் நீதிமன்ற அனுமதியை நாடியுள்ளார்கள். இன் நிலையில் விஜய், இந்தக் கொலையை கண்டித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சரியாக இயக்கவேண்டும் என்று கூறியுள்ளாரே தவிர. இதனை அவர் கையில் எடுக்கவில்லை. விஜய் செய்யவேண்டிய விடையங்கள் ?

விஜய் இதில் இரங்கல் என்பதை தாண்டி பின்வரும் விஷயங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

1. விஜய் நேரில் சென்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவது அவரின் ஆதரவாளர்கள் இடையே வரவேற்பை பெறும்.

2. தலித் அமைப்புகள், போராளிகள் இடையே விஜய்க்கு என்று ஒரு அன்பு, அனுதாபம் உள்ளது. அப்படி இருக்க.. விஜய் இன்று செல்வது அவர்களுக்கு ஆதரவாக இருக்கும், அரசியல் ரீதியாகவும் விஜய்க்கு இது பலன் அளிக்கும்.

3. சட்ட ஒழுங்கு பற்றி தமிழ்நாட்டில் புகார்கள், விமர்சனங்கள் எழுகின்றன. இதை எதிர்த்து போராட்டம், ஆர்ப்பாட்டங்களை விஜய் அறிவித்தால் அது கவனம் பெறும்.

4. நேரடியாக ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களை சந்தித்து.. அவர்களிடம் கொலை பற்றி பேசலாம். அதோடு இல்லாமல் தமிழ்நாட்டில் மாற்று தலித் அரசியலுக்கு நிலவும் வெற்றிடத்தை விஜய் நிரப்பலாம். ஏற்கனவே அம்பேத்காரை படியுங்கள் என்று நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.. அப்படி இருக்க அவரின் அரசியலை முன்னெடுத்த ஆம்ஸ்ட்ராங் உடன் நிற்க வேண்டிய கடமை விஜய்க்கு உள்ளது.