தெறிக்கவிட்ட விக்ரம்… மிரட்டும் “தங்கலான்” டீசர் – வீடியோ!

தெறிக்கவிட்ட விக்ரம்… மிரட்டும் “தங்கலான்” டீசர் – வீடியோ!

நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோத் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர். மற்றொரு முக்கிய வேடத்தில் பசுபதி நடிக்கிறார். இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் நடந்த கேஜிஎஃப் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஞானவேல் ராஜாவாக தயாரித்து வருகிறார். இதில் விக்ரம் வித்யாசமான மிரட்டலான தோற்றத்தில் நடித்து மிரள வைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் வைத்து வருகிறது. இதில் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் மிரட்டலா நடித்து பின்னி பெடல் எடுத்திருக்கிறார். இப்படத்தின் மூலம் மிகச்சிறந்த திறமை வாய்ந்த நடிகர் என்பதை மீண்டும் ஒருமுறை தங்கலான் திரைப்படத்தின் மூலம் விக்ரம் நிரூபித்திருக்கிறார். இதில் விக்ரம் உயிரை கொடுத்து நடித்திருப்பதாக அவரது ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி தள்ளியுள்ளனர்.