140 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து பூமிக்கு கிடைத்துள்ள ஒரு சிக்னல் -டோ கோட் செய்யும் நாசா

140 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து பூமிக்கு கிடைத்துள்ள ஒரு சிக்னல் -டோ கோட் செய்யும் நாசா

சுமார் பூமியில் இருந்து 140 மில்லியன் மைல்களுக்கு அப்பால், இருந்து ஒரு சிக்னல் கிடைத்துள்ளதை நாசா உறுதிசெய்துள்ளது. ஆனால் இது ஏலியன்களிடம் இருந்து வந்தது என்று நீங்கள் நினைக்கு முன்னர், ஒரு விடையத்தை சொல்லியாக வேண்டும். இதுவரை நாளும் மின் அலைகளை பயன்படுத்தியே விண்வெளியில் செய்திப் பரிமாற்றம் மற்றும், வீடியோக்கள் பரிமாறப்படுகிறது. இதனால் சிலவேளைகளில் அதிக தூரத்தில் இருந்து ஒரு சாட்டலைட் அனுப்பும் சிக்னல், மாதக் கணக்கு ஆகும் பூமி வந்துசேர.

இதேவேளை லேசர் கதிகளைக் கொண்டு செய்திகளை அனுப்பும் ஒரு புது தொழில் நுட்ப்பத்தை அமெரிக்கா கண்டு பிடித்துள்ளது. இதன் மூலம் சில நிமிடங்களில் எல்லாம், செவ்வாய்க் கிரகத்தில் இருந்து ஒரு சிக்னலை பெற்றுவிட முடியும். மாதக் கணக்கில் காத்திருக்க தேவை இல்லை. இந்த தொழில் நுட்ப்பம் தொடர்பாக அமெரிக்கா ஆராய்ந்து வரும் நிலையில் தான் இந்த புது சிக்னல் கிடைத்துள்ளது. அதிலும் பெரிய டுவிஸ்ட் என்னவென்றால்.

தற்போது கிடைத்துள்ள சிக்னல், லேசர் கதிர்களை பாவித்து வந்த சிக்னல் என்கிறது நாசா. இதனால் நாசா இந்த லேசர் கதிர் சிக்னலை மிகவும் துல்லியமாக ஆராய்ந்து வருகிறது. இது வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பியதா ? இல்லை சூப்பர் நோவா போன்ற பெரு வெடிப்புக் காரணமாக உருவாகிய லேசர் கதிகர்களா என்பது இன்னும் தெரியவில்லை. அமெரிக்கா டீ-கோட் செய்து வருவதாக அறிவித்துள்ளது.