அனைத்தையும் விழுங்கப் போகும் The Great Attractor என்னும் மாபெரும் சக்த்தி ..என்ன நாசம் அட இது ?

அனைத்தையும் விழுங்கப் போகும் The Great Attractor என்னும் மாபெரும் சக்த்தி ..என்ன நாசம் அட இது ?

“The Great Attractor”  (தி கிரேட் அட்ராக்டர்) அப்படி என்றால்…. நீங்கள் Attract ஆகும் நயன் தாரா, நமிதா இல்லை விஜய் என்று நினைத்தால்…  உண்மையில் நீங்கள் ஒரு முட்டாள் தான்.  தயவு செய்து தொடர்ந்து வாசிப்பதை நிறுத்திவிட்டு, ஏதாவது ஒரு Gossip செய்தியை போய் வாசியுங்கள். ஏன் என்றால் நாம் இங்கே தர உள்ள செய்தி என்பது மிகவும் புதுமையான விடையம். நாசாவால் சில வாரங்களுக்கு முன்னர் உறுதிசெய்யப்பட்ட விடையம்.  The Great Attractor என்ற ஒரு மாபெரும் சக்த்தி பற்றிய விடையம் இது ….

நமது சூரிய குடும்பம்(9 கிரகங்கள்) இது அடங்கியுள்ள பால் வெளி நட்சத்திரக் கூட்டம். மேலும் அண்ட வெளியில் உள்ள பல கோடி பால் வெளி நட்சத்திரக் கூட்டம், இவை அனைத்துமே ஒரு பக்கமாக எதனையோ நோக்கி ஈர்கப்பட்டுகொண்டு  இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? ஆனால் அது தான் உண்மை.  பல லட்சம் கோடி, நட்சத்திரக் கூட்டம், கோள்கள், விண்-கற்கள் இவை அனைத்தையும் , பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து ஈர்த்துக்கொண்டு இருக்கிறது ஒரு ஈர்ப்பு சக்த்தி.  இதனைத் தான் “The Great Attractor” என்று சொல்கிறார்கள். அது யார் ? அந்த இடத்திற்குச் சென்று விட்டால், முடிவில் என்ன நடக்கும் ? அந்த ஈர்ப்பு விசை நினைத்துப் பார்க்க முடியாத அளவு பலமாக இருக்க காரணம் என்ன ? மனித குலத்திற்கே புரியாத விடையம் இவை. இது குறித்து ஒரு சிறிய விளக்கத்தை தான் இங்கே பார்கப் போகிறீர்கள். இதுவரை எந்த ஒரு தமிழ் மீடியாவிலும் இது குறித்த செய்தி ஒன்று கூட வெளியாகியது இல்லை.

athirvu

அதாவது இந்தச் செய்தியை நீங்கள் வாசிக்கும் வேளையில், நீங்கள் எங்கோ ஒரு இடத்தில் அசையாமல் நின்று கொண்டு இருக்கலாம். இல்லையென்றால் இளைப்பாறிக்கொண்டு இருக்கலாம். ஆனால் நீங்கள் இயங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது. ஏன்…. நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தால் கூட, நீங்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறீர்கள். ஆம் அது தான் உண்மை. காரணம் பூமி ஒரு செக்கனுக்கு, 30KM என்ற ரீதியில் படு வேகமாக சென்றுகொண்டு இருக்கிறது. அதாவது 1 மணி நேரத்தில் 1,000 மைல்களை அது கடந்துவிடும். பூமி படு வேகமாக சூரியனைச் சுற்றி வருகிறது. 9 கிரகங்களையும் ஈர்த்து வைத்துள்ள சூரியன், பூமியைக் காட்டிலும் வேகமாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இருக்கிறது. நாம் நிலையாக ஒரு இடத்தில் இருக்கிறோம் என்று தான் நாம் இது நாள் வரை நினைத்து வந்தோம்.

இதனால் நாம் என்ன நினைக்கிறோம் என்றால், சூரியன் நிலையாக உள்ளது. அதனை 9 கிரகங்கள் சுற்றி வருகிறது என்று. ஆனால் அது உண்மை இல்லை. இது போக, இந்த அண்ட வெளியில் உள்ள அனைத்து நட்சத்திரக் கூட்டம் மற்றும், கிரகங்கள் ஒன்றடியாக, இந்த சக்த்தியை நோக்கி நகர்ந்துகொண்டு இருப்பதால். அதனை மனிதர்களால் கண்டறிய முடியவில்லை.  தற்போது விஞ்ஞானிகள் என்ன கண்டு பிடித்துள்ளார்கள் என்றால், பூமியில் இருந்து சுமார் 220மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால், ஒரு சக்த்தி உள்ளது. அது அனைத்துப் பொருட்களையும் தன் வசம் இழுத்துக் கொண்டு இருக்கிறது என்பது, தெளிவாகியுள்ளது. இந்த சக்த்தி என்ன? என்பது பெரும் ஆச்சரியம், காரணம் நிலாவைக் கூட எம்மால் 1MM நகர்த்த முடியாது. ஆனால் சூரிய குடும்பங்களையே தன் பால் இழுத்துக் கொண்டு இருக்கும் அளவு, இதற்கு சக்த்தி எங்கிருந்து வந்தது ? என்பது தான்.

athirvuநாசா விஞ்ஞானிகள் அதி சக்த்திவாய்ந்த, ராடர் மூலம் ஆராய்ந்ததில் எமது பூமி செக்கனுக்கு 600KM என்ற வேகத்தில் இந்த சக்த்தி நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதேவேளை சூரியனும் நகர்வதால், பூமியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் நாம் அந்த இடத்திற்கு சென்று விட்டால் நமக்கு என்ன நடக்கும் ? அது தான் விஞ்ஞானிகளின் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இந்த அண்டவெளியில், கைவிடப்பட்ட அல்லது மிகவும் மறைமுகமாக இருக்கும் ஒரு பகுதியில் தான் குறித்த கிரேட் அட்ராக்டர் என்ற சக்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.  பூமியில் இருந்து நாம் தெற்கு பக்கமாக ஈர்கப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். தெற்க்குப் பக்கத்தில் ஒரு திரை போன்ற அமைப்பில் நட்சத்திரக் கூட்டம் ஒன்று உள்ளது. இதனை நாம் south pole wall என்று அழைக்கிறோம். இது ஒரு திரை வடிவில் உள்ளது.

குறித்த இந்த திரையும் கிரேட் அட்ராக்டர் பக்கம் நோக்கி ஈர்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதன் பின்னால் உள்ள எமது பால் வெளி நட்சத்திரக் கூட்டம், அந்த திரை ஈர்கப் படும் அளவு வேகத்தில், நாம் செல்லவில்லை என்ற விடையத்தை உணர்த்தியுள்ளது. இதனை மிக சுருக்கமாகச் சொல்லப் போனால், ஒரு மிகச் சிறிய படகில் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் பயணிக்கும் ஆறு உங்களை இழுத்துச் செல்கிறது. உங்கள் கைகளில் எந்த ஒரு சக்தியும் இல்லை இதனை தடுக்க. அந்த ஆறு எங்கே சென்று முடிகிறதோ. அங்கே தான் நீங்கள் செல்லப் போகிறீர்கள். ஆனால் அது கடலாக இருக்கலாம், இல்லை ஒரு பள்ளத் தாக்கா இருக்கலாம். சென்ற பின்னரே தெரியும். எமது பால் வெளி நட்சத்திரக் கூட்டமே அப்படியே அழியப் போகிறதா தெரியவில்லை ?

athirvu

ஆனால் ரஷ்யாவுக்கு உக்ரைன் நிலம் மீது ஆசை ! சிங்கள மக்களுக்கு தமிழர்களை அழிக்க ஆசை ! தி/மு.காவுக்கு ஆட்சிமேல் ஆசை ! மனிதர்களுக்கு பணம் மேல் ஆசை. இந்த உலகில் எதுவும் நிலை இல்லை. ஆனால் நிலையான விடையம் நேரம் தான். ஏன் என்றால் நேரம் என்பது சென்றால் அது மீண்டு வராது. நேரம் போகும் வேகத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அது கூடிக் குறையலாம். ஆனால் நேரம் என்பது மட்டுமே, இந்த அண்ட வெளியில் நிலைத்து நிற்கிறது. இந்த குறுகிய நேரத்தில் வாழும் மனிதர்கள் நாம்… அந்த வினாடிகளை இனிமையாக கழிக்க முடியாதா ?

அதிர்வுக்காக
கண்ணன்

மேலும் புரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.