உண்மையான டயட் உடல் பயிற்ச்சி தான் ஒரு நாளைக்கு 6 முறை சாப்பிடும் கிருஸ்டியானோ றொனால்டோ

உண்மையான டயட் உடல் பயிற்ச்சி தான் ஒரு நாளைக்கு 6 முறை சாப்பிடும் கிருஸ்டியானோ றொனால்டோ

பல விளையாட்டு வீரர்கள் தொடக்கம் மேலும் பல ஆண்களுக்கு, 6பேக்ஸ் உடலுடன் மிகவும் கட்டுமஸ்தாக இருக்க… எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் தொப்பை போடுகிறது என்று பலர் கவலையடைந்து இருப்பீர்கள். உங்களுக்கு தெரியுமா உதைபந்தாட்ட வீரர் கிஸ்டியானோ றொனால்டோ ஒரு நாளைக்கு 6 முறை சாப்பிடுகிறார். மேலும் பல ஆண்கள் ஒரு நாளைக்கே 6,000 கலோரி கொண்ட உணவை உட்கொள்கிறார்கள். அதாவது ஒரு ஆணுக்கு ஒரு நாளைக்கு, 2,500 கலோரி தேவைப்படுகிறது. அவ்வளவு தான்.

ஆனால் ஒரு சிறிய பிளேட்டில் சாதத்தை போட்டால் அதன் கலோரி 400 தொடக்கம் 450 ஆக இருக்கும். இதற்கு மேல் சில கறி வகைகளைச் சேர்த்தால் போதும் மிக இலகுவாக 550 கலோரி ஆகி விடும். அது போக நம்மில் பலர், ஒரு பிளேடுடன் நிறுத்துவது இல்லையே ? 2ம் தரம் போடுச் சாப்பிடுவார்கள். மிக எழிதாக 1,000 கலோரி எகிறிவிடும். அதுபோக காலை உணவு , பின்னர் இரவு நேர உணவு, என்று பார்த்தால் மட்டும் , நாம் சுமார் 3,000- தொடக்கம் 3,500 கலோரி உணவை உட்கொண்டு இருப்போம். இடை இடையே நொருக்குத் தீனி உண்டால், 5,000 கலோரிகளை உட்கொண்டு இருப்போம்.

ஆனால் உடலுக்கு தேவை 2,500 கலோரி தான். சாதாரணமாக 8 மணி நேரம் வேலை செய்யும் ஒரு ஆணுக்கு தேவை 2,500 கலோரி மட்டுமே. அதிகமாக உட்கொண்ட 2,500 கலோரி கொழுப்பாக மாற்றப்பட்டு, உடலில் சேர்கப்படுகிறது. அப்படி என்றால் றொனால்டோ ஒரு நாளைக்கு 6 தடவை உணவை உட்கொள்கிறாரே அவருக்கு ஏன் தொப்பை இல்லை என்று கேட்டால், அவர் உண்ணும் உணவில் கொழுப்பு சத்து இல்லை. அதில் அதிகமாக புரதச் சத்து(புரோட்டீன்) தான் உள்ளது. பொதுவாக றொனால்டோ விரும்பி உண்பது , சிக்கன் பிரஸ்ட் பீஸ், மாட்டின் இதயம், மாட்டு ஈரல், மற்றும் மாட்டு இறைச்சி.

மஞ்சல் கரு அற்ற முட்டை. இப்படி விளையாட்டு வீரர்கள் மற்றும் உடல் பயிற்ச்சி செய்யும் ஆண்கள் புரதச் சத்து உள்ள உணவை தான் உண்டு வருகிறார்கள். அதிலும் சிலர், 6,000 கலோரி உள்ள உணவுகளை கூட உண்கிறார்கள். ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக 90 நிமிடம் அல்லது 180 நிமிடம்(3 மணி நேரம்) ஓயாமல் விளையாடுகிறார்கள். இதனூடாக மட்டும் அவர்கள், சுமார் 4,000 தொடக்கம் 5,000 கலோரிகளை எரிக்கிறார்கள். பொதுவாக அதிக தொப்பை உள்ள ஆண்கள், இதனைப் பின் பற்றினால் மட்டும் போதும்.

ஒரு நாளைக்கு 2,500 கலோரிக்கு உள்ளே உள்ள உணவை, 3 நேரத்தில் சாப்பிடுவது. நொருக்குத் தீனி அறவே கூடாது. மேலும் ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் 4 தடவையாவது உடல் பயிற்ச்சி. அது நடப்பதாக கூட இருக்கலாம். ஆனால் 1 மணி நேரம் வரை உடல் பயிற்ச்சி செய்வது நல்லது. தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால், போதும் , உடல் எடை தானாக குறைய ஆரம்பிக்கும். உங்களுக்கும் 6பேக்ஸ் வரும்… மிகவும் சுறு சுறுப்பாக இருப்பீர்கள். ஒரு வித்தியாசத்தை உணருவீர்கள்.