பிரிட்டன் பயணிகள் விமானத்தை ஹக் செய்யும் புட்டின் பெரும் ஆபத்து என்கிறார்கள் !

பிரிட்டன் பயணிகள் விமானத்தை ஹக் செய்யும் புட்டின் பெரும் ஆபத்து என்கிறார்கள் !

அண்மையில் போலந்துக்கு சென்று லண்டன் நோக்கிப் பயணித்துகொண்டு இருந்த பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சரின் சிறிய ஜெட் விமானம், ரஷ்ய ஹக்கர்களால் ஊடறுப்புச் செய்யப்பட்டது. இதனால் சுமார் 30 நிமிடங்களுக்கு விமானத்தில் உள்ள GPS கருவிகள் செயல் இழந்தது. பிரித்தானிய பாதுகாப்பு நிலையம், தமது அமைச்சர் பெரும் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து உடனடியாக 2 போர் விமானங்களை அத்திசை நோக்கி அனுப்பியது.

ஆனால் 30 நிமிடம் கழித்து GPS கருவிகள் வழமைக்கு திரும்பியது. இதன் பின்னரே இது ரஷ்யாவின் வேலை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈசி-ஜெட் விமானம், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் உட்பட பல பிரித்தானிய விமானங்கள் போலந்து பக்கமாக பறக்கும் போது GPS கருவிகள் வேலை செய்யாமல் போகிறது என்று முறைப்பாடு செய்துள்ளார்கள். ரஷ்யா ஏதோ ஒரு உயரிய தொழில் நுட்ப்பத்தை பாவித்து, விமானங்களின் திசையறி கருவிகளை செயல் இழக்கச் செய்கிறது என்ற பெரும் சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இதன் காரணத்தால் பிரித்தானியா உடனடியாக தனது விமான எதிர்ப்பு கட்டமைப்பையும் வான் பாதுகாப்பு கட்டமைப்பையும் மாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் அரசு வைத்திருப்பது போல ஒரு அயன் -டோம்(இருப்பு வளையம்) ஒன்றை நிர்மாணிக்க பிரித்தானியா ஆரம்பிக்க உள்ளதாக அறியப்படுகிறது. இந்த கட்டமைப்பை நிறுவ அமெரிக்கா ஆதரவு கொடுக்கும் என்றும் எதிர்பார்கப்படுகிறது.

Source: https://www.dailymail.co.uk/news/article-13339451/britain-iron-dome-missile-drone-putin-iran-penny-mordaunt.html