விஜய்யின் The GOAT படம் ரிலீஸ் ஆகும் தேதி இதுதான்…

விஜய்யின் The GOAT படம் ரிலீஸ் ஆகும் தேதி இதுதான்…

விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இப்போது சென்னை கோவளம் பகுதியில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த படம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஜுன் 13 ஆம் தேதியே வெளியாக திட்டமிடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக விடுமுறைகள் வருவதால் ஒருவாரம் முன்பே ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.