அவருக்கு ஜோடி நானா? முடியாது… ராஜமௌலி கேட்டும் நடிக்க மறுத்த திரிஷா!

அவருக்கு ஜோடி நானா? முடியாது… ராஜமௌலி கேட்டும் நடிக்க மறுத்த திரிஷா!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையான திரிஷா தமிழ் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். 2000 காலகட்டத்தில் நடிப்பு பயணத்தை துவங்கியவர் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் நம்பர் ஒன் நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து திரிஷா பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

தமிழை போன்றே தெலுங்கிலும் அவர் தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை தனது மார்க்கெட் குறையாமல் தொடர்ச்சியாக விஜய் அஜித் என அடுத்தடுத்த சூப்பர் ஹிட் ஹீரோக்களுடம் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது ஒரு காலத்தில் ராஜமௌலி த்ரிஷாவிடம் கேட்டும் அவர் படத்தில் நடிக்க மறுத்தாராம். அது வேறு எந்த படமும் இல்லை, இராஜமௌலி இயக்கத்தில் காமெடி நடிகர் சுனில் நடித்த “மரியாதை ராமண்ணா” படத்தில் திரிஷாவை ஹீரோயினாக நடிக்க அணுகினார்களாம். ஆனால், திரிஷா காமெடி நடிகர் என காரணம் சொல்லி அந்த படத்தை மறுத்ததாக கூறப்படுகிறது.