இப்படித் தான் இருக்கப் போகிறது பிரிட்டன் பாராளுமன்றம் அரைவாசிக்கு மேல் லேபர் கட்சி MPக்கள்

இப்படித் தான் இருக்கப் போகிறது பிரிட்டன் பாராளுமன்றம் அரைவாசிக்கு மேல் லேபர் கட்சி MPக்கள்

பிரித்தானிய பாராளுமன்றம் கூடும் வேளையில், லேபர் கட்சியின் 412 MPக்களும் கலந்துகொண்டால், இப்படித் தான் இருக்கும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று வரை படம் போட்டுள்ளது. இங்கே சிவப்பாக இருக்கும் அனைத்து MPக்களும் லேபர் கசியை சார்ந்தவர்கள். நீல நிறத்தில் உள்ள MPக்கள் கான்சர் வேட்டிவ் கட்சி, மற்றும் மஞ்சல் நிறம் லிபரல் கட்சி. எதிர்கட்சி மற்றும் லிபரல் கட்சி இரண்டும் இணைந்து குரல் கொடுத்தால் கூட 412 MPக்களுக்கு ஈடாகாது.

அவர்கள் பேசுவது கூட சரியாகக் கேட்க்காது என்கிறார்கள். ரிஷி சுண்ணக் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று இன்றுவரை பெரும் வாக்குவாதத்தில் ஈடு பட்டுவருகிறார்கள் அக் கட்சியின் உறுப்பினர்கள். 2024 டிசம்பர் மாதம் வரை அவரால் ஆட்சியில் இருந்திருக்க முடியும். ஆனால் ஜூலை மாதமே ஏன் தேர்தலை நடத்தி. இவ்வாறு பெரும் படு தோல்வியை சந்தித்தார் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

பலரும் பல காரணங்களைச் சொல்லி வருகிறார்கள். அதாவது டிசம்பர் வரை காத்திருந்து தேர்தலை நடத்தி இருந்தால், ரிஷி சுண்ணக் பலத்த அடி வாங்கி இருப்பார் என்றும் சிலர் கூறுகிறார்கள். தற்போதைய தோல்வியை விட, அதிக அளவில் அவர் தோற்றுப் போய் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.