அட்வான்ஸ் பணத்தை வாங்கிட்டு… நயன்தாராவுடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன்!

அட்வான்ஸ் பணத்தை வாங்கிட்டு… நயன்தாராவுடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன் எப்போது நயன்தாராவை திருமணம் செய்தாரோ அப்போதிலிருந்து தனது கரியரில் கவனத்தைச் செல்லாமல் நயன்தாரா சம்பாதித்து வைத்திருக்கும் பணமே தனக்கு போதும்டா சாமி என்ற வகையில் சுற்றி திரிந்து வருகிறார்.

முன்னதாக அஜித்தின் 62 படத்தை விக்னேஷ் சிவன் இறக்குவதாக இருந்தார். ஆனால் முதல் பாதி கதையை மட்டும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அஜித்திடம் கூறிவிட்டு இரண்டாம் பாதி கதையை கூறாமல் இருந்திருக்கிறார். இதனால் மிகுந்த கோபத்திற்கு உள்ளான தயாரிப்பு நிறுவனம் அவரை தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்குனராக போட்டார்கள் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது .

இப்படியான சமயத்தில் தற்போது மீண்டும் LIC திரைப்படத்தில் கமிட் ஆகி படத்தை எடுத்து வந்தார் விக்னேஷ் சிவன். அப்படத்தின் சூட்டிங் எடுத்துக் கொண்டிருக்கும்போதே படப்பிடிப்பு முடிவதற்குள் நயன்தாராவுடன் வெளிநாட்டிற்கு ட்ரிப்ளித்திருக்கிறார். இதனால் படத்தின் வேலைகள் அப்படியே பாதியிலே நிற்கிறதாம்.

வருகிற தீபாவளி தினத்தில் LIC படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக சொன்னார்கள். ஆனால் விக்னேஷ் சிவனின் இந்த செயலை பார்த்தால் தீபாவளிக்கு ரிலீசாகுமா? என்பதை கேள்விக்குறியாக விட்டது. இதனால் திரைப்படம் எதிர்பார்த்த படி நிச்சயம் இருக்காது எனக் கூறுகிறார்கள். விக்னேஷ் சிவன் தன்னுடைய வாழ்க்கையை சீரழித்துக் கொண்டதோடு நயன்தாராவையும் சேர்த்து சீரழிக்கிறார் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.