மகேந்திர பாகுபலியாக நயன்தாரா மகன்கள் – விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்!

மகேந்திர பாகுபலியாக நயன்தாரா மகன்கள் – விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக இருந்து வந்தவர்கள் தான் நடிகை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இவர்கள் இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து காதலிக்க துவங்கி சுமார் 8 வருடம் காதலித்தது பிறகு பெற்றோர் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு ஒரு சில மாதத்திலேயே நயன்தாரா வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அவ்வப்போது குழந்தைகளுடன் போட்டோக்களை வெளியிட்டு வருவார் நயன்தாரா . அத்துடன் இவர்கள் தற்போது வெளிநாட்டிற்கு ட்ரிப் அடுத்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மிகப்பெரிய அளவில் வைரலாகியது.

குறிப்பாக நயன்தாராவுடன் மிக பாசமாக கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் நடிகர் விக்னேஷ் சிவன் தனது மகன்களை பாகுபலி போன்று தூக்கி போஸ் கொடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு “மை டியர் பாகுபலி ஹாப்பி ஃபாதர்ஸ் டே உங்களுடன் இருப்பதால் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கிறது. லவ் யூ மை உயிர் & உலக் என பதிவிட்டு இருக்கிறார் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.