பிரசாத் ஸ்டூடியோவில் GOAT பட குத்துப் பாட்டு செம ஆட்டம் போட்ட விஜய்- திரிஷா

பிரசாத் ஸ்டூடியோவில் GOAT பட குத்துப் பாட்டு செம ஆட்டம் போட்ட விஜய்- திரிஷா

தளபதி நடித்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் தான் கோட். இதில் முக்கியமான ஒரு குத்துப் பாட்டை நேற்றைய தினம்(சனி) சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் படமாக்கியுள்ளார்கள். இந்தப் குத்துப் பாடலுக்கு குண்டூர் ஸ்ரீ யை தான் முதலில் புக் செய்ய இருந்தார்களாம். ஆனால் அவர் திடீரென அஜித்தின் விடா முயற்ச்சி படத்தில் ஒரு பாட்டுக்கு கமிட் ஆகி விட்டதால். இந்தக் குத்துப் பாட்டுக்கு திரிஷாவை அழைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கு.

இருந்தாலும் இசையமைப்பாளர் யுவன், இந்தப் பாடலை எப்படி போட்டுள்ளார் என்பது பெரும் சந்தேகமாக உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே அவர் போட்ட முதல் பாட்டு, பெரும் சர்சையை கிளப்பியுள்ளது. விசில் போடு அதைப் போடு என்று , சும்மா ஏனோ தானோ என்று இசை அமைத்துள்ளார் யுவன்.

இதனால் இந்த குத்துப் பாட்டாவது ஒரு நல்ல பாட்டாக அமைந்திருக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.