TVK -APPஆரம்பித்து சில நிமிடங்களில் 20 லட்சம் பேர் இணைந்தார்கள்- விஜய் சாதனை !

TVK -APPஆரம்பித்து சில நிமிடங்களில் 20 லட்சம் பேர் இணைந்தார்கள்- விஜய் சாதனை !

தளபதி விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மோபைல் செயலி(APP) இன்று வெளியிடப்பட்டது. அது வெளியாகி ஒரு சில நிமிடங்களில் சுமார் 20 லட்சம் பேர் தம்மை தொண்டர்களாக பதிவுசெய்துள்ள விடையம் தமிழகத்தையே புரட்டிப்போட்டுள்ளது.

எந்த ஒரு கட்சிக்கும், இப்படியான ஒரு அசாதாரண ஆதரவு இருந்தது இல்லை என்கிறார்கள் நெட்டிசன்கள். நாளுக்கு நாள் இது பல்கிப் பெருக உள்ளது. தளபதி விஜய் அவர்கள் 2 கோடிப் பேரை தொண்டர்களாக இணைக்க , திட்டம் தீட்டியுள்ளார். 50 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில் அரசியல் செய்துவரும் திமுக விற்க்கே 1 கோடித் தொண்டர்கள் கிடையாது. இன் நிலையில் விஜய், 2 கோடி இளைஞர்களை ஒன்று திரட்ட உள்ளார்.

நடைமுறைக்கு இது சாத்தியமா என்று பலர் கேள்வி எழுப்பி இருந்தார்கள். ஆனால் இன்றைய தினம் 20 லட்சம் பேர் இணைந்ததைப் பார்த்து, பலர் வாய் அடைத்துப் போய் உள்ளார்கள். 2026ம் ஆண்டு தேர்தல், மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. ஆனால் தளபதி விஜயை பொறுத்தவரை வென்றால் முதல் அமைச்சர் , இல்லை என்றாலும் எதிர் கட்சித் தலைவராக வருவார். இதனால் அவர் வெற்றி மிக மிக உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.