விஜய்-69 Hவினோத் இயக்குனர் விஜய் பிறந்த நாள் ஜூன் 22 அன்று பூஜை போடுவதாக திட்டம் !

விஜய்-69 Hவினோத் இயக்குனர் விஜய் பிறந்த நாள் ஜூன் 22 அன்று பூஜை போடுவதாக திட்டம் !

தளபதி விஜய் அவர்களின் கடைசிப் படமான விஜய்69 ஐ, H.வினோத் அவர்கள் இயக்க உள்ளதாக திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பூஜை விஜய் பிறந்த நாள் அன்று அதாவது ஜூன் மாதன் 22ம் திகதி போட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் படப் பிடிப்பு ஆரம்பமாகினால், டிசம்பர் மாதத்திற்குள் படத்தை முடிக்கும் படி விஜய் கூறியுள்ளாரம். இந்த வருடம் அதாவது 2024 டிசம்பரோடு அவர் அனைத்து படப் பிடிப்புகளையும் முடிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

எனவே 2025 தொடக்கம் 2026ம் ஆண்டு வரை அவர் தமிழகத்தில் பல சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு, கட்சியை பலப்படுத்துவதோடு. பல மாநாடுகளை நடத்தவும் திட்டம் தீட்டியுள்ளார். 2026 நடக்கவுள்ள தேர்தலில் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அவரைப் பொறுத்தவரை எந்த ஒரு கட்சியோடும் கூட்டுச் சேர அவர் விரும்பவில்லை. தனித்து நிற்ப்பது என்ற முடிவில் இருக்கிறார் என்று புஷி ஆனந் அவர்கள் தனது நண்பர் ஒருவருக்கு தெரிவித்துள்ளாராம்.

எனவே தளபதி விஜய் அவர்கள் மிகவும் நேர்த்தியாக திட்டங்களை தீட்டி. அதன்படி நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார் என்பது தெளிவாகப் புரிகிறது. நல்ல ஒரு திட்டமிடல் அவரிடம் உள்ளது. இதனால் முற்றாக சினிமாவுக்கு முழுக்குப் போட்டு முழு நேர அரசியலில் அவர் இறங்க உள்ளார். எனவே 2024 டிசம்பருக்கு பின்னால், அவர் தேர்தல் பிரச்சாராங்களில் ஈடுபடவும், தீவிர அரசியலில் இறங்குவதையும் நாம் பார்க இருக்கிறோம்.