டாப் ஹீரோக்களுடன் விஜயகாந்த் இணைந்து கொடுத்த தரமான 5 ஹிட் படங்கள்.. சிவாஜியுடன் மிரட்டிய சண்டை காட்சி

டாப் ஹீரோக்களுடன் விஜயகாந்த் இணைந்து கொடுத்த தரமான 5 ஹிட் படங்கள்.. சிவாஜியுடன் மிரட்டிய சண்டை காட்சி

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் விஜயகாந்த் படங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்புகள் இருக்கும். அந்த வகையில் ரஜினி கமலின் படங்களை விட இவருக்கு தான் இளைஞர்கள் மத்தியில் அதிக மவுசு உண்டு. அந்த அளவிற்கு இவருடைய படத்தில் எதார்த்தமான நடிப்பும் நல்ல கருத்துக்களும் அமைந்த படமுமாக இருக்கும். அதனாலேயே சில முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அப்படி மற்ற ஹீரோக்களுடன் இணைந்து கொடுத்த தரமான படத்தை பார்க்கலாம்.

மனக்கணக்கு: ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு மனக்கணக்கு திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், ராதா, அம்பிகா, ராஜேஷ், சரத் பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அத்துடன் இப்படத்தில் திரைப்பட இயக்குனராக கமலஹாசன் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விதமாக விஜயகாந்த் இறந்து போவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

செந்தூரப்பாண்டி: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு செந்தூரப்பாண்டி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், யுவராணி, விஜயகாந்த் மற்றும் கௌதமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்யின் அண்ணனாக விஜயகாந்த் கெஸ்ட் ரோலில், செந்தூரப்பாண்டி கேரக்டரில் நடித்திருக்கிறார். அத்துடன் தம்பியின் காதலுக்கு வருகிற பிரச்சினையை சரி செய்து காதலியுடன் சேர்த்து வைக்கும் அண்ணன் கேரக்டரை பிரமாதமாக கொடுத்திருப்பார்.

பெரியண்ணா: எஸ் எஸ் சந்திரசேகர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு பெரியண்ணா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், சூர்யா, மீனா, மானசா மற்றும் மனோரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சூர்யா தன் குடும்பத்தை கொன்ற வில்லன்களை கொலை செய்து சிறை கைதியாக கதை ஆரம்பிக்கப்படும். சில காரணங்களுக்காக வெளியே வந்த சூர்யா காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். அதன்பின் இவருடைய காதலுக்கு ஏற்படும் தடைகளை தாண்டி விஜயகாந்த் எப்படி இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார் என்பது தான் மீதமுள்ள கதையாகும்.

நூறாவது நாள்: 1984 ஆம் ஆண்டு இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் மோகன், நளினி, விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் நூறாவது நாள். இப்படம் குறைந்த பட்ஜெட்டில் 12 நாட்களிலேயே படத்தை எடுத்து முடிக்கப்பட்டது. இப்படத்தின் கதை அடுத்து சீரியல் திரில்லர் படமாக ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார செய்து பிரம்மிப்புடன் பார்க்க வைத்த படமாக வெற்றி பெற்றது.

வீரபாண்டியன்: கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வீரபாண்டியன். இதில் விஜயகாந்த் மணிமாறன் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர்களுடன் சேர்ந்து ராதிகா, சுமித்ரா, ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது கோயில் நகைகளை திருட நினைக்கும் திருட்டு கும்பலிடம் இருந்து நகையே மீட்டு பாதுகாக்கும் பொறுப்பில் சிவாஜி மற்றும் விஜயகாந்த் இணைந்து மிரட்டி இருப்பார்கள்.