குடும்பத்தோடு கூடி அழுத VJ அர்ச்சனா – விஷயம் கேட்டா சிரிப்பீங்க (வீடியோ)

குடும்பத்தோடு கூடி அழுத VJ அர்ச்சனா – விஷயம் கேட்டா சிரிப்பீங்க (வீடியோ)

90ஸ் காலகட்டத்தில் பிரபலமான தொகுப்பாளினியாக சன் தொலைக்காட்சியில் தனது கெரியரை ஆரம்பித்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான ஆங்கராக இருந்து வந்தவர்தான் VJ அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 2000 காலகட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளையும், அத்துடன் செய்தி வாசிப்பாளினியாகவும் இருந்து வந்தார்.

படிப்படியாக முன்னேறி தற்போது வரை தனது மார்க்கெட்டை விடாமல் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் VJ அர்ச்சனா. இவர் திரைப்படங்களிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். குணசித்திரனாக இது தவிர ஜீ தமிழில் பணியாற்றி வந்தார் அர்ச்சனா.

ஜீ தமிழில் சரிகமப சரிகமப சீசன் வெற்றிகரமாக நடத்தினார். இது தவிர தனது மகள் சாராவுடன் இணைந்து சூப்பர் மாம்ஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி பேமஸானார். தொகுப்பாளர் பணியில் பிஸியாக இருந்து கொண்டிருந்த போது அந்த பணியை தூக்கி எறிந்து விட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் அர்ச்சனா Mercedes-Benz GLC ரக காரை அவர் சுமார் ஒரு கோடி ருபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார். இதற்காக 25 வருடம் உழைத்ததாக அவர் கூறி இருக்கிறார். அப்போது ஆனந்த கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அர்ச்சனா உடன் அவரது தங்கை மற்றும் அவரது தாய் உள்ளிட்ட எல்லோரும் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. என்ன தான் ஆனந்த கண்ணீராக இருந்தாலும் இப்படியா? கூடி நின்று கும்பலாக அழுவது என நெட்டிசன்ஸ் அவரை கலாய்த்து வருகிறார்கள்.