அடப்பாவிங்களா! சுட்டி டிவி ரைம்ஸ் மாதிரி இருக்குடா – “GOAT” பாடலை வெச்சு செய்த இளம்பெண்!

அடப்பாவிங்களா! சுட்டி டிவி ரைம்ஸ் மாதிரி இருக்குடா – “GOAT” பாடலை வெச்சு செய்த இளம்பெண்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார். விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம் , கைலா,ஸ்னேகா , அஜ்மல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அண்மையில் விஜய் குரலில் வெளியான இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘விசில் போடு’ ‘பார்டி ஒன்னு தொடங்கட்டுமா’ என தொடங்குகிறது. மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ள இப்பாடலை இளம்பெண் பெண் ஒருவர் பங்கமாக கலாய்த்துள்ளார்.

தயவுசெஞ்சு என்ன மன்னிச்சிடுங்க…. ஆனால் இது உங்களுக்கே தெரியும். என்ன பாட்டு எழுதி வச்சிருக்கீங்க? பாட்டாடா எழுதி வச்சிருக்கீங்க? சுட்டி டிவில வர ரைம்ஸ் மாதிரி இருக்கு. இந்தப் பாட்டு படத்துக்கு மிகப்பெரிய சம்பவத்தை பண்ணி விட்டுட்டு போகப்போகிறது அப்படின்னு மட்டும் நல்லா தெரியுது என பங்கமாக கலாய்த்து தலையுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.