ஹீரோ லுக்கில் அப்பாவையே மிஞ்சும் விஜய் மகன் – வைரல் புகைப்படம்!

ஹீரோ லுக்கில் அப்பாவையே மிஞ்சும் விஜய் மகன் – வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மும்முரமாக நடைப்பெற்று வரும் நிலையில் விஜய் அரசியலில் படு பிஸியாக இறங்கி அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே விஜய்யின் கில்லி திரைப்படம் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி தியேட்டரில் விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. கிட்டதட்ட இத்திரைப்படம் 90 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்து வருகிறது.

இப்படி ஆன நேரத்தில் விஜய் குறித்து எந்த ஒரு செய்தி வெளியானாலும் அது வைரல் ஆகிவிடுகிறது. அப்படித்தான் தற்போது விஜய்யின் மகன் சஞ்சயின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது அதில் கருப்பு நிற கருப்பு நிற கோட்டு சூட் அணிந்து சஞ்சய் அப்பா விஜய்யே மிஞ்சும் அளவுக்கு ஹேண்ட்சம் லுக்கில் செம மாஸாக இருக்கிறார் இந்த போட்டோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடும் தக்கது.