58 வயசிலும் மனுஷன் இப்படி இருக்காரே… ஹேண்ட்ஸம் லுக்கில் மயக்கும் விக்ரம்!

58 வயசிலும் மனுஷன் இப்படி இருக்காரே… ஹேண்ட்ஸம் லுக்கில் மயக்கும் விக்ரம்!

முழுக்க முழுக்க தனது திறமையால் வளர்ந்து தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்தவர் தான் விக்ரம் . இவர் ‘சேது’ திரைப்படத்தின் மூலமாக தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்து தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்தார் .

குறிப்பாக எப்பேர்ப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் விக்ரம் அந்த கதாபாத்திரத்தை அவ்வளவு அழகாக நடித்துக் கொடுத்து மிரள செய்வார் அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கடும் ஒரே நடிகர் விக்ரம் என்று ரசிகர்கள் புகழ் பாராட்டுவார்கள் அப்படித்தான் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் “தங்கலான்|” என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் சேர்ந்து பசுபதி ,பார்வதிமேனன், மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்ளும் படகுழுவினர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் விக்ரமின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக 58 வயசுல மனுஷன் இவ்வளவு அழகா இருக்காரே என அவரது அழகையும் அவரது கட்டுமஸ்தான தோற்றத்தையும் பார்த்து வியந்து புகைப்படங்களை வைரல் ஆக்கியுள்ளனர் ரசிகர்கள்.

தங்கலான் திரைப்படம் , நடிகர் விக்ரம் , விக்ரம் புகைப்படங்கள், thangalaan movie ,