முட்டாள்களிடம் விவாதம் செய்யாதே… செம்பருத்தி டீ சர்ச்சைக்கு நயன்தாரா பதிலடி!

முட்டாள்களிடம் விவாதம் செய்யாதே… செம்பருத்தி டீ சர்ச்சைக்கு நயன்தாரா பதிலடி!

லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் செம்பருத்தி டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான விஷயமாக மாறி இருக்கிறது. அதாவது, நயன்தாரா… “செம்பருத்தி டீ diabetes, high cholesterol, high blood pressure மற்றும் இதய கோளாறு போன்றவற்றை சரிசெய்ய உதவும்” என நயன்தாரா பதிவிட்டு இருக்கிறார்.

நயன்தாராவின் இந்த பதிவினை விமர்சித்த “The Liver Doc” என்ற பெயரில் ட்விட்டரில் இருக்கும் ஒரு மருத்துவர் “இது நிரூபிக்கப்படாத ஒன்று” என குறிப்பிட்டு, செம்பருத்தி டீ சுவையானது என சொன்னால் மட்டும் போதும்.. ஆரோக்கியம் குறித்து பேச நயன்தாரா யார்? அவர் என்ன மருத்துவரா? என கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார்.

தற்ப்போது அந்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ள நயன்தாரா, “”முட்டாள்களிடம் விவாதம் செய்யாதே. உங்களை அவர்கள் மட்டமான நிலைக்கு இழுத்து சென்று, அவர்களின் அனுபவத்தால் தோற்கடித்துவிடுவார்கள்” என கோபமாக பதிவிட்டுள்ள நயன்தாரா மேலும் செம்பருத்தி டீ எப்படி செய்ய வேண்டும் என அவர் புதிதாக ஒரு பதிவையும் போட்டிருக்கிறார்.

நயன்தாரா, செம்பருத்தி டீ சர்ச்சை, nayanthara , hibiscus tea , cinema news