நாங்கள் இந்தியாவை ஆதரிக்க தயார்…. பிரபல நாடு கருத்து…!!!!!

இந்த செய்தியை பகிருங்கள்

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து ரஷ்யா மீது விதிக்கப் பட்டிருக்கின்ற அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது என தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தி எரிசக்தி இறக்குமதியை பன்முகப்பட்ட இந்தியாவை ஆதரிக்க தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுபற்றி வெள்ளை மாளிகை செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியபோது, ரஷ்ய எரிசக்தி மற்றும் பிற பொருட்களின் இறக்குமதியை துரிதப்படுத்த வேண்டும் அல்லது ஆதரிக்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை, வெளிப்படையாக அந்த முடிவுகள் தனிப்பட்ட நாடுகளால் எடுக்கப்படுகிறது.மேலும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து 1 முதல் 2 சதவிகித எண்ணெய் மட்டுமே இறக்குமதி செய்திருக்கின்றனர்.

இந்தியாவின் இறக்குமதியை பன்முகப்படுத்தவும், நம்பகமான சப்ளையர்கள் பணியாற்றவும், இந்தியாவிற்கு ஆதரவளிக்கவும் அமெரிக்கா தயாராக உள்ளது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறோம். தொடர்பு கொள்வதற்கும் ஈடுபடுவதற்கும் எங்களிடம் பல வழிகள் இருக்கிறது. வெளிப்படையாக எங்கள் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அனுப்புவது அதற்கு ஒரு உதாரணமாகும் என அவர் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கடந்த வாரம் புதிய பொருளாதாரத் தடைகள் குறித்து இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us