ராயல் லுக்கில் போட்டோஷுட் எடுத்து ட்ரெண்டிங் காக்கும் பாலிவுட் நடிகை!……

Spread the love

நடிகை கஜோல் தேவ்கன் லேட்டஸ்ட் போட்டோஷுட்ஸ்…….

இந்தி சினிமாவில் மிகவும் முக்கியான முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். 1992 ல் பள்ளியில் படிக்கும் போதே “பெகுடி” என்ற படத்தில் நடிகையாக அறிமுகமா னார். அதனை தொடர்ந்து படிப்பை நிறுத்திய கஜோல் 1993 ல் ஷாருக்கான்னுடன் இணைந்து “பாசிகர்” மற்றும் “யேத்தில்லாகி” என்ற ஹிந்தி படத்தில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். 1997 ல் “மின்சார கனவு” என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.

90களில் முன்னணி நட்சத்திரமாக அவரை நிலைநிறுத்திச் சிறந்த நடிகைக்கான இரண்டு பிலிம்பேர் விருதுகளை பெற்றார். பின் “குப்ட் தி ஹிடன் ட்ரூத்” மற்றும் “துஷ்மனில்” என்ற படங்களில் பல விமர்சனங்களை பெற்றார். 2001 ல் “கபி குஷி கபி கம்” என்ற குடும்ப நாடகத்தில் நடித்தபிறகு மூன்றாவது பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன் பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவே இருந்தார்.

2017 ல் “வேலையில்லா பட்டதாரி 2” என்ற படத்தில் தனுஷுடன் நடித்திருந்தார். தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாகத் தனது புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.