தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான El Salvador க்கு அமெரிக்க அகதிகளை, கிரிமினல்களை மற்றும் தனது சொந்த நாட்டு கிரிமினர்களை அனுப்ப அமெரிக்காவுக்கு Salvador நாடு ஓப்புதல் அளித்துள்ளது. இதனூடாக டொனால் ரம் பெரும் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள விசா இல்லாத அகதிகள், அமெரிக்க குடியுரிமைபெற்ற ஆனால் அமெரிக்க சிறையில் உள்ள கிரிமினல் குற்றவாளிகள் என்று, அனைவரையும் எல்- சல்வடோர் நாட்டுக்கு இனி அனுப்ப முடியும். எந்த நேரம் ஆனாலும் விமானத்தில் கைதிகளை அனுப்ப, எல் சல்வடோர் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார். அதுவும் எல் சல்வடோர் சிறைச்சாலை என்பது ஒரு நரகம், என்று அழைக்கப்படுகிறது. அங்கே கிரிமினல் கைதிகள் செல்லவே கிலி கொள்வார்கள். காரணம் அப்படியான ஒரு படுபயங்கரமான சிறைச்சாலை அங்கே உள்ளது.
இந்தச் செய்தி காட்டுத் தீ போல அமெரிக்காவில் மட்டும் அல்ல, உலகம் முழுவது பரவி வருகிறது. இதனால் அமெரிக்காவில் விசா இல்லாமல் தங்கியுள்ள அகதிகள் பலர் தாமாகவே முன் வந்து படிவத்தை நிரப்பி, தமது சொந்த நாட்டுக்கு சென்று வருகிறார்கள். இந்த எல் சல்வடோர் சிறைக்கு செல்ல முடியாது என்ற காரணத்தால்.
ஒரு வகையில் டொனால் ரம் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை சட்டென நிறைவேற்றி வருகிறார் என்று தான் கூறவேண்டும். அமெரிக்காவில் உள்ள சிறைகள் இனி வெறிச்சோடிக் காணப்படும். மேலும் சொல்லப் போனால், மிகக் குறைந்த செலவில், சிறைகளை எல் சல்வடோர் நாட்டில் அமெரிக்கா இயக்கும். இதனால் பணமும் மிச்சம்.