Vijay: யார் இந்த ராகுல் சிறுவன் ? விஜயை தன்னுடைய இடத்திற்கே வரவளைத்துள்ளான்

நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய்,  நேற்று(20) பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது சிறுவன் ராகுலின் பேச்சு “என்னை ஆழமாக பாதித்தது” என்று தெரிவித்தார். யார் அந்த ராகுல்? அவர் என்ன பேசினார் என்பதைப் பார்ப்போம்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் மக்களை சந்திக்க நடிகர் விஜய் இன்று பரந்தூருக்கு வந்தார். மக்களிடம் உரையாற்றிய போது, அவர் பேசியதாவது:

“கிட்டத்தட்ட 910 நாட்களாக நீங்களெல்லாம் உங்கள் மண்ணுக்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள். ராகுல் என்ற சிறுவன் இந்த போராட்டத்தைப் பற்றி பேசிய வீடியோவை நான் பார்த்தேன். அந்த வீடியோ எனது மனதைக் கடுமையாக தொட்டது. உங்களை நேரில் சந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்று உணர்ந்தேன். உங்களுடன் நான் எப்போதும் இருக்கிறேன், எப்போதும் நிற்பேன் என்பதையும் உறுதியாகச் சொல்ல விரும்பினேன். அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்,” என்று அவர் உணர்ச்சிகரமாகப் பேசினார்.

இந்த உரை பரந்தூர் போராட்டம் குறித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.