Celebrities Pongal Celebration: கியூட் கிளிக்கில் ஓவியா, மீனா..

உலகத் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகையை சினிமா பிரபலங்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். பட்டு வேட்டி, சேலையில் பிரபலங்களின் கிளிக் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. 

புன்னகையரசி சினேகா தன் வீட்டில் கணவர் பிரசன்னா மற்றும் குழந்தைகளுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். புன்னகையரசியின் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்.நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடினார். அதன் புகைப்படங்களை பகிர்ந்தவர், ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

நடிகர் கார்த்தி பொங்கல் வாழ்த்தை பச்சை பசேலென கூறியுள்ளார். அவரது வாழ்த்து பதிவில், “குன்றா நலமும்.. குறையா வளமும்.. மங்கா புகழும்.. மாசிலா செல்வமும் பெற்று… நீடூழி வாழ, இத்தை திருநாளில் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!”என்று நடிகர் கார்த்தி பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

நடிகர் சாந்தனு தன் மனைவி கீர்த்தியுடன் பொங்கல் கொண்டாடினார். நடிகர் அதர்வா தன் அம்மாவுடன் பொங்கல் கொண்டாடியதுடன், அவரது தந்தை முரளியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். காந்தாரா நடிகர் ரிஷப் ரெட்டி பொங்கல் கொண்டாடினார். நடிகர் அருண் விஜய் பொங்கல் கொண்டாடியதுடன் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறினார். நடிகர் மீனா பொங்கல் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்தார். 

நடிகர் சூரி தன் காளையுடன் பொங்கல் வாழ்த்து கூறினார்.  நடிகர் ஓவியா சேலையில் கியூட் போஸ் கொடுத்துள்ளார்.