வரலாற்றில் முதல் தடவையாக யாழ்ப்பாணம் சென்ற அரச குடும்ப முக்கிய உறுப்பினர் BTC

வரலாற்றில் முதல் தடவையாக யாழ்ப்பாணம் சென்ற அரச குடும்ப முக்கிய உறுப்பினர் BTC

பிரித்தானியாவில் இயங்கிவரும், தமிழருக்கான கான்சர்வேட்டிவ்(BTC) அமைப்பின், கடும் முயற்ச்சிக்கு பின்னர், இலங்கை செல்ல இருந்த அரச குடும்ப முக்கிய உறுப்பினரான இளவரசி ANNE அவர்கள் யாழ் செல்ல ஒத்துக் கொண்டார். இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரித்தானிய முன் நாள் அரசி, எலிசபெத் அம்மையாரின் மகளும், தற்போதைய அரசர் சார்ளஸ் அவர்களின் சகோதரியுமான “ANNE” இலங்கை செல்ல இருந்தார். இன் நிலையில், தமிழருக்கான கான்சர்வேட்டிவ் அமைப்பு(BTC) எடுத்த கடும் முயற்ச்சியால், அவர் யாழ்ப்பாணம் செல்ல சம்மதித்தார்.

பல அரச குடும்ப அங்கத்தவர்கள் இலங்கை சென்று திரும்பியுள்ள போதும், எந்த ஒரு அங்கத்தவர்களும் இதுவரை யாழ்ப்பாணம் சென்று தமிழர் தாயக பூமியை பார்த்தது இல்லை. தற்போது ANNE அவர்கள் யாழ்ப்பாண விஜயம் மேற்கொண்டது, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேச அளவில் தமிழர்களுக்கு ஒரு அங்கிகாரம் கிடைத்துள்ளதோடு. தமிழர்கள் வேறு சிங்களவர்கள் வேறு, அங்கே இரு தேசம் உள்ளது என்பதனை இந்த விஜயம், நிரூபித்துள்ளது. இன்றைய தினம் மதிப்புக்குரிய  Princess Anne அவர்கள், யாழ் நூலகம் சென்றுள்ளார். “அவர் யாழ்ப்பாணம் செல்லும் போது நானும் கூடவே சென்றது எனக்கு மிக மிக பெருமையாக உள்ளது என்று, இலங்கைக்கான, பிரித்தானிய தூதுவர் ரிவீட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.”

அதுமட்டுமல்லாது, அவர் யாழ் சரித்திரத்தையும் தொன்மைவாய்ந்த தமிழர் நாகரீகத்தைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டார் என்பது பெருமையான விடையம். தமிழர்களுக்கு ஒரு அங்கிகாரம் கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும். பிரித்தானியாவில் திறம்பட இயங்கும் BTC , எதிர்வரும் திங்கள்(15) அன்று பிரித்தானிய வெஸ்மினிஸ்டர் பகுதியில் பொங்கல் விழாவையும் ஏற்பாடு செய்துள்ளார்கள். இதில் பிரித்தானிய அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவும் உள்ளார்கள். எனவே தமிழர்கள் சென்று இதில் நிச்சயம் கலந்துகொள்ளவேண்டும்!