43 வயதிலும் ததும்பும் அழகு…. மாடர்ன் லுக்கில் மயக்கும் ஜோதிகா!

43 வயதிலும் ததும்பும் அழகு…. மாடர்ன் லுக்கில் மயக்கும் ஜோதிகா!

மும்பையை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இங்கு மாபெரும் வெற்றி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து 90ஸ் காலகட்டத்தில் டாப் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஜோதிகா. இதனிடையே இவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தமிழ்நாடு மருமகளாக இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் பிறந்த ஊருக்கே சென்று அங்கேயே குடி புகுந்து விட்டார் நடிகை ஜோதிகா. அங்கு சென்றவுடன் இந்தி படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்த வருகிறார். அண்மையில் தான். அஜய் தேவகன் மற்றும் மாதவன் உடன் இணைந்து “சைத்தான்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தற்போது ஜோதிகா. ஸ்ரீகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இந்த படம் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க இப்படத்தில் ஜோதிகா ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார். அடுத்த மாதம் 10ம்தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் தற்போது ஜோதிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி 45 வயதிலும் அழகு குறையாமல் இப்படி ததும்பு அழகில் இருக்கீங்களே என அவரை ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.