எப்படி இந்த மனித குலம் அழியும் தெரியுமா ? ஒரு சின்ன பட்டனை ரஷ்யா அழுத்தினால் என்ன எல்லாம் நடக்கும் ?

எப்படி இந்த மனித குலம் அழியும் தெரியுமா ? ஒரு சின்ன பட்டனை ரஷ்யா அழுத்தினால் என்ன எல்லாம் நடக்கும் ?

இத்தனை மில்லியன் ஆண்டுகள் உயிரோடு, இயற்கையாக , இருக்கும் இந்த பூமி, ஒரு பட்டனை அழுத்தினால் போதும் அப்படியே அழியும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தோற்றுவிக்க கூடிய நாடாக ரஷ்யாவே உள்ளது. தற்செயலாக கூட ஒரு, அணு குண்டு ஏவுகணையை ரஷ்யா ஏவினால் போதும். அது நடு வானில் வெடித்து சிதறினாலும், அல்லது அது தனது, இலக்கை தாக்காமல் விட்டால் கூட, ஏனைய நாடுகள் அதனை உணர முன்னரே, தமது நாட்டு அணு குண்டு ஏவுகணைகளை ரஷ்யா நோக்கி ஏவி விடும் நிலை காணப்படுகிறது.

ரஷ்ய அணு குண்டு ஏவுகணை ஒன்று, லண்டனை தாக்கினால். தாக்கிய புள்ளியில் இருந்து, சுமார் 5KM சுற்றளவுக்குள் உள்ள பொருட்கள் அனைத்தும் ஆவியாகி விடும். அதாவது, அவை இருந்த இடம் தெரியாமல் போய் விடும். மேலும் தாக்கிய புள்ளியில் இருந்து 10KM சுற்றளவில் உள்ள பொருட்கள் , மனிதர்கள் இறந்து போவார்கள். இதேவேளை சுமார் 20KM சுற்றளவுக்கு அதன் தாக்கம் உணரப்படும். வீட்டின் கண்ணாடிகள் உடையும். மேலும் சொல்லப் போனால், 50 தொடக்கம் 60KM சுற்றளவைச் சுற்றி, கதிரியக்க துகள்கள் பரவத் தொடங்கும்.

இதனை சுவாசிக்கும் மக்களுக்கு சில தினங்களில், நுரையீரல் புற்று நோய் வரும். இதனால் அவர்கள் அவஸ்த்தைக்கு ஆளாகி இறப்பார்கள். ரஷ்யா ஏதாவது ஒரு நேட்டோ நாடு மீது, அணு குண்டு ஏவுகணையை ஏவினால், நேட்டோ நாடுகள் எந்த ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்க மாட்டார்கள். உடனடியாக ரஷ்யா நோக்கி பதில் ஏவுகணை தாக்குதல் ஆரம்பிக்கப்படும். இதுவே நேட்டோ நாடுகளின் எழுத்துமூல சாசனம்.

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட நேட்டோ நாடுகளிடம் உள்ள மொத்த அணு ஆயுத ஏவுகணைகள் 5943 ஆகும். ஆனால் ரஷ்யாவிடம் மட்டும் 5977 அணு ஆயுதங்கள் உள்ளது. 3ம் உலகப் போர் என்று ஆரம்பித்தால். சீனா நடு நிலை வகிக்கும். ஆனால் வட கொரியா மற்றும் ஈரான் ஆகிய 2 நாடுகளும் ரஷ்யாவுக்கு ஆதரவாகச் செல்ல வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணத்தால் தான், அமெரிக்கா இந்த 2 நாடுகள் மீதும் எப்பொழுதும் ஒரு கண் வைத்திருக்கிறது.

ஒரு வேளை ரஷ்யா அணு குண்டை ஏவினால் என்ன நடக்கும் என்பதனை புரியவைக்கும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.