RAF Jackal drone என்ற பிரித்தானியாவின் ஆளில்லா விமானம் ஒரு Game Changer

RAF Jackal drone என்ற பிரித்தானியாவின் ஆளில்லா விமானம் ஒரு Game Changer

பிரித்தானியாவின் ராணுவப் படை அணி என்பது, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் போல மிகப் பெரியது அல்ல. ஆட்கள் தொகையில் குறைவு. ஆனால் பிரித்தானியா கடந்த 20 வருடங்களாக பல நவீன ராணுவ தளபாடங்களை செய்து தனது, ராணுவத்தை மிகப் பலமான ராணுவமாக உருவாக்கி வைத்திருக்கிறது. இதன் ஒரு அங்கம் தான் வான் படை. பிரித்தானியாவின் விமானப்படை மிகவும், பலமானது. அமெரிக்காவுக்கே துணை புரியும் அளவில் அதன் பலம் உள்ளது.

தற்போது RAF(றோயல் ஏர் போஃஸ்) கண்டுபிடித்துள்ள ஜக்-கால் என்ற, ஆளில்லா விமானத்தைப் பற்றிய பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளதோடு. அதன் வடிவமைப்பு தொடர்பாக பல செய்திகள் ஊடகத்தில் கசியவும் ஆரம்பித்துள்ளது.  பொதுவாக 90% சத விகிதமான ஆளில்லா விமானங்கள், ஓடுபாதையில் ஓடித் தான் பறப்பில் ஈடுபடுகிறது.

ஆனால் தற்போது பிரித்தானியா தயாரித்துள்ள ஜக்-கால் ரக விமானம் வேட்டிக்கல் டேக் ஆஃப் என்று அழைக்கப்படும், திடீரென பறப்பில் ஈடுபடக் கூடியவை. அதனை விட அது மிகவும் பலம்வாய்ந்த ஏவுகணைகளை கொண்டு சென்று துல்லியமாக தக்க வல்லவை என்று கூறப்படுகிறது.

அடுத்த தலைமுறை வடிவமைப்பைக் கொண்ட இந்த தாக்குதல் விமானத்தின் தாக்குதல் திறண் தொடர்பாக மேலதிக விபரங்களை பிரித்தானிய அரசு வெளியிடவில்லை. இருப்பினும் அது ஒரு கேம் சேஞ்சர் என்று சொல்லப்படக் கூடிய அளவுக்கு, ஆளில்லா விமானங்களின் தலைவன் என்று சொல்லும் அளவுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.