விளம்பரம் தேடாமல் நடிகர் உயிரை காப்பாற்றிய கேப்டன்..

விளம்பரம் தேடாமல் நடிகர் உயிரை காப்பாற்றிய கேப்டன்..

மண் மணக்கும் மதுரையிலிருந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தவர் விஜயகாந்த் அவர்கள். விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து தன்னுடன் பலரையும் திரை கடலில் கரை சேர்த்தவர்.

மக்களுக்கு தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று நோக்கோடு பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருக்கும்போதே தைரியத்துடன் களமிறங்கி எதிர்க்கட்சி தலைவராக வீறு கொண்டு எழுந்த சிங்கம் முடிந்தவரை பிறருக்கு உதவி விட்டோம் என்ற திருப்தியோடு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் தனது கஷ்ட காலத்தில் இறைவனை நினைக்கிறார்களோ இல்லையோ கண்டிப்பாக விஜயகாந்தை நினைத்து விடுவார்கள் அந்த அளவுக்கு தன்னிடம் உதவி என்று வருபவரை வெறும் கையோடு அனுப்புவதில்லை இந்த பொன்மனச்செம்மல்.

சமீபத்தில் மறைந்த போண்டாமணி அவர்கள் விஜயகாந்த் புரொடக்ஷனில் பல படங்களில் நடித்து உள்ளார். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த பொழுது தொண்டர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றுள்ளார் இதனை அறிந்த விஜயகாந்த் அவர்கள் முதலில் போண்டாமணியை உள்ளே வரவழைத்து பேசி உள்ளாராம்.

இவர்கள் கட்சி தொடங்கிய பின் என்னுடன் வந்தவர்கள். நாம் கலைஞர்கள் என்று அளவலாவி ஐந்தாயிரம் ரூபாய் காண செக் கொடுத்து அனுப்பினாராம். சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமலும் கடனாலும் கஷ்டப்பட்டபோது 12 லட்சத்திற்கான கடனை ஒரே செக்கில் அடைத்து ஹாஸ்பிடல் காகவும் ஒரு லட்சம் கட்டியுள்ளாராம். மேலும் போண்டாமணி இறந்த பின்னும் அவரது குடும்பத்திற்கு முதல் ஆளாக சென்று நிதி உதவி செய்த பண்பாளர்.

வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்திலும் நிவாரண உதவிக்குள் தன் புகைப்பட ஸ்டிக்கரை ஒட்டி விளம்பரம் தேடும் நடிகர்கள் மத்தியில் எந்த ஒரு ஆதாயமும் கருத்தில் கொள்ளாமல் இருக்கும் இத்தகைய பண்பாளரை இனி தமிழ் சினிமாவில் காண்பது அரிது. தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலர் வரலாம். ஆனால் அவர்கள் அனைவரும் விஜயகாந்த் ஆகி விட முடியாது அல்லவா. கலைஞர்களுக்காக வாழ்ந்த இவரின் புகழ்! கலைஞர்கள் உள்ள வரையிலும் கொண்டாடப்படும் என்பது உண்மையே!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *