Saturday, May 26 2018

athirvu

3 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது சிறுமி..

May 15, 2018    875

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதைத்தடுப்பதற்காக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கிலிடும் புதிய சட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்நிலையில், சமீபத்தில், உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் 3 நபர்கள் சேர்ந்து 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு டெல்லி செல்லும் ரயிலில் சிறுமியை விட்டுச் சென்றுள்ளனர். டெல்லி காவல்துறையினர் சிறுமியை மீட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், குற்றவாளிகளில் இருவர் அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மூன்றாவது குற்றவாளியை கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குற்றவாளிகள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக டி.எஸ்.பி ராகேஷ் குமார் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.