
இலங்கையின் ஹெட்டிப்பொல என்னும் இடத்தில் உள்ள விஹாரையில் பணிபுரிந்த 70 வயதுடைய தேரர் ஒருவர் 08 வயதுச் சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ள சம்பவமானது மிகவும் வைரலாகப் பேசப்பட்டு வருகின்றது. குறித்த தேரர் கடந்த இரண்டு மாதங்களாகக் குறித்த சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைவாகப் பொலிஸார் விசாரணையினை ஆரம்பித்துள்ளதாகவும், தற்போது குறித்த தேரர் தலைமறைவாகி விட்டதாகவும், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணையினை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.