வருடம் £26,000 சம்பாதிக்கலாம் என்று லண்டன் சிறுவர்களை கவரும் கோஷ்டி- தமிழர்களும் சிக்கி..

வருடம் ஒன்றுக்கு சுமார் 26,000 பவுண்டுகளை சம்பாதிக்க முடியும் என்று, ஆசை காட்டி லண்டனில் உள்ள பல நூறு சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி வருகிறது ஒரு கும்பல். இவர்கள் செய்யும் வேலை, போதைப் பொருள் கடத்தல் ஆகும். இதில் உள்ளவர்களை பிடிக்க பொலிசார் திண்டாடி வருகிறார்கள். காரணம் என்னவென்றால், எந்தச் சிறுவர்களுக்கும் குழுவில் உள்ள முக்கிய ஆட்களை தெரியாது. இந்தக் குழு முதலில் தனக்கு கீழ் ஒரு சிறுவர் உப குழுவை நியமித்து. பின்னர் அவர்களின் கீழ் பலரை வேலைக்கு அமர்த்தி வருகிறது.

லண்டனில் பெரும்பாலும் ஆசிய இனத்தவர்களே இந்தக் குழுவில் அங்கம் வகிப்பதாக பொலிசார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்கள். இந்தியர்கள், பாக்கிஸ்தான் நாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களும் இதில் அடங்குவதாக கூறப்படுகிறது. எனவே தமிழர்களே உங்கள் விட்டுப் பிள்ளைகள் எதனை செய்கிறார்கள் என்பது குறித்து நீங்கள் விழிப்போடு இருப்பது , நல்லது. ஏன் எனில் பள்ளிக்கூடம் செல்வதாக கூறி விட்டு பல சிறுவர்கள் இவ்வாறு பாட் டைமாக இந்த வேலையை செய்து வருகிறார்கள்.

ஒரு இடத்தில் இருந்து ஒரு பொதியை மற்றுமொரு இடத்திற்கு கொண்டு சென்று பத்திரமாக கொடுத்தால் 60 தொடக்கம் 100 பவுண்டுகளை அவர்கள் சம்பளமாக பெறுகிறார்கள். சில பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் மாதம் 2,000 பவுண்டுகள் வரை இவ்வாறு சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. அது போக கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற பல கத்தி குத்து சம்பவங்களோடு இந்த குழுவுக்கு சம்பந்தம் உள்ளது என்பதனையும் தற்போது தான் பொலிசார் கண்டறிந்துள்ளார்கள். சில சிறுவர்கள் பொதிகளை பெற்று அதனை உரிய இடத்தில் கொண்டு போய் சேர்க்காமல். தாமே அதனை எடுத்து தூள் வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார்கள்.

இவ்வாறான ஆட்களையே இக் குழு கத்தியால் குத்திக் கொலை செய்தும் உள்ளார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே மக்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. உங்கள் வீட்டு சிறுவர்கள் கைகளில் நீங்கள் கொடுக்காத பணம் இருந்தால். அல்லது அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருந்தால். அவை எங்கே இருந்து வந்தது ? என்பதனை முதலில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் குழு லண்டனில் பெரும் நெட்வேர்காக பரவி. முழு லண்டனையும் ஆக்கிரமித்துள்ளது என்று மெற்றோ பொலிடன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.