லாஜிக்கே இடிக்குதே ? பெற்றோல் விலை குறைப்பு மண்ணெண்ணை விலை அதிகரிப்பு !

லாஜிக்கே இடிக்குதே ? பெற்றோல் விலை குறைப்பு மண்ணெண்ணை விலை அதிகரிப்பு !

என்னாபா லாஜிக்கே இடிக்குதே ? இப்படி ஏன் நடக்கிறது என்று முதல் தடவையாக மக்கள் தேர்தலுக்குப் பின்னர் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளார்கள். அதாவது நேற்று முன் தினம் பெற்றோல் விலை குறைவதாக அறிவித்த அனுரா , இதேவேளை மண்ணெண்ணை விலை அதிகரித்தது பற்றிப் பேசவே இல்லை. ஏழை மக்கள் பாவிப்பது மண்ணெண்ணை, இதன் விலையை கூட்டி, ஆடம்பர கார்களுக்கு அடிக்கும் பெற்றோல் விலையை ஏன் குறைக்க வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெற்றோல் விலையை அப்படியே வைத்துக் கொண்டு, மண்ணெண்ணை விலையை குறைத்து இருந்தால், சிறுவர் சிறுமியர் படிக்க, ஏழை மக்கள் சமைக்க இந்த மண்ணெண்ணை உதவி புரிந்து இருக்கும். ஆனால் ஏன் இப்படி தலை கீழாக நடந்துள்ளது என்பது தான் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி ஆகும்.