24M மில்லியன் பெறுமதியான தங்க பார்களை ஏர்-போட்டில் இருந்தே கடத்திச் சென்ற நபர்- தேடப்படும் தமிழர் இவர் தான் !

24M மில்லியன் பெறுமதியான தங்க பார்களை ஏர்-போட்டில் இருந்தே கடத்திச் சென்ற நபர்- தேடப்படும் தமிழர் இவர் தான் !

பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான தங்கக் கட்டிகள், கனடா விமான நிலையத்திற்கு வந்தது. கனேடிய வங்கி ஒன்று இந்த தங்கக் கட்டிகளை விமான நிலையம் கொண்டு வந்து அங்கிருந்து வேறு ஒரு இடம் கொண்டு செல்ல இருந்த நிலையில். மிகவும் நூதனமான முறையில், இந்த தங்கக் கட்டிகளை வாகனத்தில் ஏற்றி, King-McLean என்பவர் ஏர் போட்டில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவம் 2023ல் நடைபெற்று இருந்தது. இன்றுவரை அவரை பொலிசாரால் பிடிக்க முடியவில்லை என்பது ஒரு புறம் இருக்க.

பிரசாத் பரமலிங்கம் என்ற இலங்கைத் தமிழர் இளைஞர் இந்தக் கடத்தலில் தொடர்புப்ட்டு இருந்தார் என்று அவரை கனடா பொலிசார் கைதுசெய்து, நீதிமன்றில் நிறுத்தி இருந்தார்கள். அவருக்கு பின்னர் பெயில் கிடைத்து இருந்தது. ஆனால் பரமலிங்கமும் கனடா பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்து மறைந்து விட்டார். ஒட்டுமொத்தமாக 24 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான தங்க கட்டிகளை விமான நிலையத்தில் இருந்து மிகவும் நூதனமாக கொண்டு சென்று விட்டார் இந்த King-McLean என்னும் நபர். இதில் 3 பேர் கூட சம்பந்தப்படவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விடையம்.

அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் அவரைக் அமெரிக்க பொலிசார் கைதுசெய்ததாக கூறப்பட்டாலும். அவரிடம் இருந்து எந்த ஒரு தங்கக் கட்டிகளை பொலிசார் எடுக்கவில்லை. மேலும் பரமலிங்கமும் தற்போது கனடா நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டார் என்று பொலிசார் கருதுகிறார்கள். இந்த அளவு தங்கக் கட்டிகளை இப்படி ஒரு பக்கா பிளான் போட்டு கடத்திய நபர்களுக்கு, என்ன செய்யவேண்டும் என்று தெரியாதா என்ன ?