12 பேரை காதலித்து டாட்டா காட்டிய காதல் ராணி பின்னர் மகன் முறை இளைஞரை கல்யாணம் செய்த கொடூரம்

12 பேரை காதலித்து டாட்டா காட்டிய காதல் ராணி பின்னர் மகன் முறை இளைஞரை கல்யாணம் செய்த கொடூரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த செவிலியர் 12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றியது அல்லாமல் மகன் முறை வரும் இளைஞரையும் திருமணம் செய்துக் கொண்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் முனியம்மா. இவரது கணவர் தணிகைவேல். முனியம்மாள் அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

அவர் கணவரை பிரிந்து தனது மகள் தேவியுடன் தனியாக வசித்து வருகிறார். தேவிக்கு 24 வயதாகிறது. செவிலியல் படிப்பை முடித்துவிட்டு வீடுகளில் நோய் வாய்ப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவர்களது வீட்டிலேயே தங்கி மருத்துவம் பார்க்கும் பணியை தேவி செய்து வந்தார். கடந்த 4 மாதங்களாக பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த தேவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார்.

மகளை காணாமல் தவித்த முனியம்மா, அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் பதறி போய் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அதே பகுதியில் சாய்ராம் என்ற 19 வயது இளைஞருடன் காணாமல் போனதாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் விசாரணையில் தேவியும் அந்த 19 வயது இளைஞனும் உறவினர்கள் என தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் தீவிரமாக இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் இருவரும் வழக்கறிஞர்கள் மூலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது விசாரணை மேற்கொண்டதில் சாய்ராமுக்கும் தேவிக்கும் இடையே கடந்த 3 மாதங்களாக காதல் இருந்து வந்ததாம்.

சாய்ராமுக்கு தேவி சித்தி முறை என்பதால் இந்த காதலுக்கு இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வந்ததால் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் காவல் நிலையத்திற்கு வருவதை அறிந்த தேவியின் தாய்மாமன் மணி என்ற இளைஞர், தேவியும் தானும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கடந்த 3 மாதங்களாக தேவியின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.