4,000 டிகிரி வெப்பம் வரும்..ரஷ்யாவின் புதிய ஏவுகணையின் மறுபக்கம்! அமெரிக்காவை அலறவிடும் புதின்

4,000 டிகிரி வெப்பம் வரும்..ரஷ்யாவின் புதிய ஏவுகணையின் மறுபக்கம்! அமெரிக்காவை அலறவிடும் புதின்

மாஸ்கோ: உலகிலேயே வேறு யாரிடமும் அந்த ஏவுகணை இல்லை என ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியிருந்தார். தற்போது அந்த ஏவுகணை குறித்த புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஒரேஷ்னிக் ஏவுகணை விழும் இடத்தில் சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் வெப்பத்தை போல் 4 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் உருவாகும் என்று புதின் எச்சரிக்கை செய்துள்ளார். இந்த வெப்பத்தில் இரும்பு உருகுவதோடு, கான்கிரீட்டுகள் ஆவியாகிவிடும் என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அச்சமடைந்துள்ளன.

உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி பிரிட்டன் வழங்கிய ஏவுகணைகளை வைத்து ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக உக்ரைன் மீது ரஷ்யாவும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள டினிப்ரோ நகரின் மீது ரஷ்யா புதிய வகை ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையின் பெயர் ஓரெஷ்னிக். இது ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகும்.

தற்போது இந்த ஏவுகணை சோதனையை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. இந்த ஏவுகணை என்பது உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லை. ரஷ்யாவில் தான் உள்ளது என்று விளாடிமிர் புதின் ஏற்கனவே கூறியுள்ளார். அதோடு இந்த ஏ ஒரெஷ்னிக் ஏவுகணை ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லும். இந்த வேகம்என்பது மாக் 10 என இது அழைக்கப்படுகிறது.மணிக்கு 12,300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது இந்த ஏவுகணை. அதாவது வினாடிக்கு 3.40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

இந்த ஏவுகணை மாக் 10 வேகத்தில் செல்வதால் இடைமறித்து தாக்குவது என்பது கடினமானதாகும். அதுமட்டுமின்றி இந்த ஏவுகணையால் அதிகபட்சம் 5 ஆயிரம் கிலோமீட்டர்(3,100 மைல்) ரேஞ்ச் வரை தாக்குதல் நடத்த முடியும். அதோடு ஒரெஷ்னிக் ஏவுகணையால் அணு ஆயுத தாக்குதலையும் மேற்கொள்ள முடியும். ஒரு ஏவுகணையில் 6 வெடிப்பொருள் அல்லது அணு ஆயுதம் நிரப்பும் warheads இருக்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.