சில வேளைகளில் நீங்கள் காரில் ஏரி, கூகுள் மேப்பை(வழிகாட்டுதல்) பாவித்து ஒரு இடத்திற்கு செல்ல முற்படுவீர்கள். ஆனால் அது கொண்டுபோய் மிகவும் மோசமான பாதை ஊடக கொண்டு செல்லும், சிலவேளை நோ என்ரியில் கொண்டு போகும், மேலும் சொல்லப் போனால் மயானத்தில் கூட கொண்டு சென்று விடும். அப்படித் தான் இந்தியாவில் நடந்த ஒரு விபத்து கூகுள் மேப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.
இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் , வேன் ஒன்றில் சிலர் பயணித்தவேளை கூகுள் மேப்பை பாலோ பன்னியுள்ளார்கள். அது கட்டி முடிக்காத ஒரு பாலத்தின் மேல் வேனை ஏற்றச் சொல்லி உள்ளது. அவர்களும் ஓடிக் கொண்டு செல்ல, அந்தப் பாலம் திடீரென முடிவடைந்துள்ளதோடு, அதன் கீழ் நீர் தடாகம் ஒன்றும் இருந்துள்ளது. இதனால் வேன் செங்குத்தாக தண்ணீரில் விழுந்ததில் அதில் இருந்த 3 பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
இதனால் இந்திய அளவில் கூகுள், மேப் தொடர்பாக பெரும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.