பார்டி வைத்து அந்த இடத்தில் தாடி மீசையை ஷேவ் செய்த ஆர்யா ஏன் இந்தக் கொடுமை தெரியுமா ?

இந்த செய்தியை பகிர

நான் கடவுள் படத்தில் நடித்த ஆர்யா தாடி மற்றும் வீசை வைத்துக் கொண்டார். இயக்குனர் பாலா பற்றி ஊர் அறிந்த விடையம் என்னவென்றால். அவர் படப் பிடிப்பு முடிந்த பின்னர் கூப்பிட்டு திரும்பவும் ஷூட்டிங் எடுத்து, சிலவற்றை வெட்டி ஒட்டுவாராம். இதனால் சுமார் 1 வருடமாக தாடி மீசையோடு அல்லாடியுள்ளார். ஆர்யா. அட ஒழுங்கா சொறியக் கூட முடியல என்று கஷ்டப்பட்டு உள்ளார். இந்த நிலையில் ஒரு நாள் அழைத்த இயக்குனர் பாலா…

சரி இனி படப்பிடிப்பு முடிந்து விட்டது. எடுக்கவேண்டிய காட்சிகள் எல்லாம் எடுத்து விட்டேன். இனி நீங்கள் தாடி மீசையை எடுத்துக்கலாம் என்று சொல்லியுள்ளார். அவ்வளவு தான் நம்ம ஆர்யா இன்ப வெள்ளத்தில் மிதந்துள்ளார். உடனே தனது நண்பர்களை அழைத்து, ஒரு பார்டி வைப்பதாக கூறி. அனைவரையும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துள்ளார். அங்கே…

தனது நண்பர்கள் முன் நிலையில் வைத்து தான், தனது தாடி மற்றும் மீசையை ஷேவ் செய்து உள்ளார் ஆர்யா. இதனை அவரது நண்பர்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.


இந்த செய்தியை பகிர