ஜீன்ஸ் பேண்ட் உடையில் கலக்கும் பாலிவுட் நடிகை

Spread the love

நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்….

பாலிவுட்டின் மிகப்பிரபலமான நடிகரான சத்ருகன் சின்ஹாவின் ஒரே மகள் சோனாக்ஷி சின்ஹா. 2010 ல் சல்மான் கானுக்கு ஜோடியாக “தபாங்” மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்காக அவர் சிறந்த பெண் அறிமுக நடிகைகாக பிலிம்பேர் விருதை பெற்றார்.

அதனை தொடர்ந்து ரவுடி ரத்தோர், லூடெரா, இஸ் நெவர் ஆஃப் டூட்டி, தேவர், அகிரா, நூர், ஃபோர்ஸ் 2, கலங்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன் பின் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக தமிழில் லிங்கா என்ற ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது ஜீன்ஸ் பேண்டை கிழித்து அதில் புது வித ஆடை அணிந்து வைரலாக்கி வருகிறார்.