
நடிகை பூஜா ஹெக்டேவின் ஹாட் போட்டோஷுட்…
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் 2012 ல் “முகமூடி” என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். 2014 ல் “ஒக லைலா கோசம்” என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்திருந்தார். முகுந்தா, துவ்வாடா ஜகன்னாதம், ரங்கஸ்தலம்,சாஷ்யம் என பல தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். 2016 ல் “மொஹாஞ்சதாரோ” என்ற படத்தில் நடித்து ஹிந்தியில் அறிமுகமானார்.
அதன் பின் மீண்டும் தமிழில் சினிமாவில் “பீஸ்ட்” படத்தில் தளபதியுடன் இணைந்து என்ட்ரி கொடுத்தார். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார். அடிக்கடி கிளாமர் போட்டோஷுட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.




