
சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் ரூபாய் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஒரு பாடல் காட்சியில் பிகினி அணிந்தது பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் இந்த பாடல் காட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இதே போன்ற ஒரு பாடல் காட்சியை ‘ஜவான்’ படத்திலும் இயக்குனர் அட்லி வைத்திருப்பதாகவும் அதில் நயன்தாராவும் பிகினி அணிந்து நடித்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஒரு தகவல் பரவி வருகிறது.
ஆனால் பட குழுவினர்களிடமிருந்து வந்த தகவலின்படி ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா பிகினி அணிந்து நடிக்கவில்லை என்று இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தெரிவித்துள்ளனர்.அஜித் நடித்த ’பில்லா’ திரைப்படம் உள்பட ஒரு சில படங்களில் நயன்தாரா பிகினி உடையில் நடித்திருந்தாலும் அது கதைக்கு தேவையாக இருந்ததால் நடித்திருந்தார் என்றும் ஆனால் ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா பிகினி அணியும் அளவிற்கு கதையில் காட்சிகள் இல்லை என்றும் பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் ’பதான்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானதால் சென்டிமென்டாக ‘ஜவான்’ படத்தில் பிகினி காட்சிகள் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






