
இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மனோ பாலா காலமானார்…
இயக்குனராக இருந்து நடிகராக மாறி தயாரிப்பாளராக உருவேடுத்தவர் தான் மனோ பாலா. இன்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு 69 வாயதாகிறது. ஒரு தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேல் ஆஞ்சியோ சிகிச்சையில் இருந்தார். 1979 ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “புதிய வளர்ப்புகள்” என்ற படத்தின் மூலம் நடிகராகவும், உதவி இயக்குனாரகவும் அறிமுகமானார்.
பின் 24 படங்களுக்கு மேல் இயக்கினார். 1982 ல் கார்த்திக், சுஹாசினி நடித்த “ஆகாய தாமரை” படத்தில் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், சத்திய ராஜ், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவர் காமெடி நடிகராக நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானது. அவருக்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர். சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்த மனோ பாலாவிற்கு தற்போது திரையுலகினர் அவருக்கு ஆழ்ந்த வருத்ததை தெரிவித்து வருகின்றனர்


