பிரிட்டனைத் தாக்கியுள்ள கடும் குளிர் -15 வரை சென்று பெரும் அனர்த்தங்களை ஏற்படுத்தியுள்ளது

Spread the love
பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நாடுகளை, திடீரென கடும் குளிர் தாக்கியுள்ளது. அதிலும் பொதுவாக ஸ்காட் லான் தேசத்தில் -15 வரை சென்று பெரும் அனர்த்தங்களை ஏற்படுத்தியுள்ளது குளிர். பிரித்தானியாவின் பல பிரதேசங்கள் பனியால் முழுக்க மூழ்கியுள்ள நிலையில். பல சாலையோர விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
பொதுவாகக் குளிர்காலம் முடிவடைந்து இளவேனில் காலம் ஆரம்பமாகும் இந்த மார்ச் மாதத்தில் மீண்டும் கடும் குளிர் தாக்கியுள்ளமை, மக்களைப் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளது. இந்தக் கடும் குளிர் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.