தளபதி 67 இல்… Big Boss இன் பிரபல போட்டியாளர்!

இந்த செய்தியை பகிர

விஜய் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களைக் கவர்ந்த, மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சிகளில் முதலிடம் வகிப்பது Big Boss.
இது இந்த ஆண்டு சீசன் 6 ஆக ஔிபரப்பப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாது உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவது இன்னுமொரு சிறப்பம்சமாகும். இதன் இறுதிக்கட்டத்தில் ஷிவின், விக்ரமன், அசீம் ஆகியோர் போட்டி போட்டனர். எனினும் மக்களின் ஆதரவோடு அசீம் வின்னராக முடிசூடினார்.

இதில் இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளியான ஜனனி போட்டியாளராகக் கலந்துகொண்டார். அவருடைய இலங்கைத்தமிழ், துருதுரு பேச்சு ஆகியவற்றினால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். bigg Boss போட்டியாளர்களிலேயே மிகவும் வயது குறைந்தது இவரேயாகும். எனினும் நிகழ்ச்சியில் சிலவேளைகளில் பெரிதாகச் சோபிக்க தவறியமையினால் போட்டியிலிருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார்.
big Boss பைனலுக்கு வந்தபெழுது கமலிடம் பேசிய தருணம் “நிறைய மக்களுக்கு என்னை தெரிய வேண்டும் என ஆசைப்பட்டேன் அது நடந்துவிட்டது, அவங்க வீட்டுப்பிள்ளைபோல் என்னைப் பார்த்து எனக்கு அன்பும் ஆதரவும் தந்தார்கள் அதற்கு எனது நன்றி. நான் வந்த வேலை முடிந்துவிட்டது” எனக் கூறினார். இதற்குப் பதிலளிக்கும் வண்ணம் கமல் ஊருக்குப் போகவில்லையா?எனக் கேட்க ஜனனி “இல்லை” எனக் கூறினார். அதற்குக் கமல் “ஊருக்குப் போக முடியாத அளவிற்கு வாய்ப்புகள் வந்திருக்குல உங்களுக்கு” என விஜயின் தளபதி 67 பற்றி நாசுக்காகக் கூறினார். அதற்கு ஜனனியும் “ஆமா சேர்”என்றார். இவ்வுரையாடலின் ஔிப்பதிவினைப் பார்த்த ஜனனி ஆர்மிகள் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிர