
இன்று காலை வைத்தியசாலையில் பிரபல நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட மனோ பாலா அவர்கள் இறந்துவிட்டார். இவருக்குத் தனது சாவின் தேதியைத் தெரிந்து வைத்துள்ளார் என்பது தான், மிகவும் ஆச்சரியமான விடையம். ஆம் மாலை 6 மணி ஆனாலே விஸ்கி பாட்டலை திறக்க ஆரம்பித்து விடுவார் மனோ பாலா. கடந்த 40 வருடங்களாக அவருக்குக் குடிப் பழக்கம் இருந்து வந்துள்ளது. அது கல் ஈரலைப் பாதித்துள்ளது. இதனால் கல் ஈரலில்(பேங்கிரியஸ்) அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டது மட்டும் அல்லாது.
சக்கரை அளவையும் அது உடலில் அதிகரிக்கச் செய்துள்ளது. காரணம் இன்சுலினை சுரப்பது கல் ஈரல் தான். இதனால் அவரை ஜனவரி மாதம் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இன்னும் 5 அல்லது 6 மாதமே உயிர் வாழ்வார் என்று மனோ பாலா மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்து உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறியாத நடிகை ராதிகா அவர்கள், நல்ல மருத்துவரிடம் காட்ட இருந்தோம் ஆனால் இப்படி நடந்துவிட்டது என்று ரிவீட் போட்டுள்ளார் பாவம். இதனால் மனோ பாலா ஒன்றும் உடைந்து போகவில்லை. தொடர்ந்தும் நடித்து வந்தார்.
இன் நிலையில் தான் அவரது உடல் நிலை கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மோசமானது. பின்னர் அவருக்கு ஏற்பட்ட சடுதியான மாரடைப்பு காரணமாக அவர் இன்று காலை இறந்து விட்டார். இது இவ்வாறு இருக்க நடிகர் சரத் பாபுவும், இன்று(03.05.2023) ஹைதராபாத்தில் இறந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது வதந்தி என்று குடும்பத்தார் அறிவித்துள்ளார்கள். சரத் பாபு நலமோடு இருப்பதாக குடும்பத்தார் தெரிவித்தார்கள். ஆனால் சென்னையில் சன் TV அவர் இறந்துவிட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.