Sunday, June 24 2018

LYAC TV

நண்டு தன் சொந்தக் காலையே வெட்டி துண்டாடி சமையலில் இருந்து தப்பியது

Jun 04, 2018    9460

நண்டுக் கறி வைக்க ஆரம்பித்தவேளை. சட்டியில் இருந்த நண்டு ஒன்று தப்பி, ஒருவாறு கரையை அடைந்து பாத்திரத்திற்கு வெளியே சென்றுவிட்டது. ஆனால் ஒரு நண்டு ஏறினால் மற்ற நண்டு சும்மா விடாது என்ற பழ மொழிக்கு அமைய. அதன் ஒரு காலை வேறு ஒரு நண்டு கெட்டியாக பிடித்துக்கொண்டு இருந்துள்ளது. இதனால் தன் உயிரைக் காப்பாற்ற அதற்கு வேறி வழி தெரியவில்லை.

தனது காலை இந்த நண்டு துண்டித்து விட்டு தப்பியுள்ளது. இதனை பார்த்த நபர், குறித்த நண்டை, மீண்டும் சட்டிக்குள் போட மனம் இல்லாமல். அதனை தப்ப விட்டுவிட்டார். வாழ்கை என்பது எவ்வளவு முக்கியம். அது நண்டாக இருந்தாலும் சரி, ஏனைய உயிரினங்களாக இருந்தாலும் சரி. ஆனால் தூத்துக் குடியில் ஈவு இரக்கம் இன்றி 13 பேரை படுகொலை செய்துள்ளார்களே ?

இதனை இனப் படுகொலையாக அறிவிக்கவேண்டும். தமிழக அரசு இதற்கு பொறுப்பு கூறவேண்டும்.