லண்டன் கொலின்டேல் பிரேமகுமாரின் ஆனந்த லீலை- தமிழர்களே பெண் பிள்ளைகள் கவனம் !

இந்த செய்தியை பகிர

லண்டன் கொலிண்டேலில் கடை வைத்திருக்கும், பிரமுகர் பிரேமகுமார் ஆனந்தராஜா பாலியல் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் லண்டனில் ஆனந்தம் கிரியேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி, பிள்ளைகளின் அரங்கேற்றத்தை செய்கிறேன், இசைக் கச்சேரிகளை செய்து வந்தார். இன் நிலையில் குறைந்த பட்சம் ஒரு வயது குறைந்த பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை, நீதிமன்றில் நிரூபனமாகியுள்ளது. மேலும் எத்தனை சிறுமிகளை இவ்வாறு செய்தார் என்பது தெரியவில்லை.

இளையவர்களுக்கான இசை, நடனம் அவற்றை அரங்கேற்றுவது என்று கலைத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவராக பிரேமகுமார் ஆனந்தராஜா தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் பல பெற்றோர்கள் அவரை அணுகி கலை நிகழ்ச்சிகளை நடத்தித் தருமாறு கேட்ப்பது வழக்கம். இதனைப் பாவித்தே இவர் தவறான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். எனவே தமிழர்களே நீங்கள் மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இவர் போன்ற புல்லுருவிகளை அடையாளம் காணவேண்டும் என்பதற்காகவே..

இந்தப் பதிவை நாம் அதிர்வில் போடுகிறோம்.


இந்த செய்தியை பகிர