
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா முதல் சீசனில் கண்ணம்மாவாக நடித்து அனைவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்தவர் நடிகை ரோஷினி. சில காரணங்களால் அந்தச் சீரியலிலிருந்து பாதியிலேயே விலகிவிட்டார்.
அதனை தொடர்ந்து இதே சேனலில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார். அதன் பின் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார்.
அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கமாகக் கொள்கிறார். தற்போது டிரெடிஷ்னல் ஆடையில் போட்டோஷுட் எடுத்து வருகிறார்.


